இலங்கை

இரு வெவ்வேறு பிரதேசங்களில் யானை தாக்கி இருவர் மரணம்!

ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவு ஈரளக்குளத்தில் சனிக்கிழமை(16) இரவும், கிரான் பிரதேச செயலக பிரிவு திகிலி வெட்டையில் ஞாயிற்றுக்கிழமை (17) அதிகாலை யானை தாக்கி இருவர் மரணமடைந்துள்ளனர்.

இரு வெவ்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடைபெற்ற மரணத்திற்கான மரண விசாரணைகளை, திடீர் மரண விசாரணை அதிகாரிகளான எம்.எஸ்.எம்.நஸீர், கே. பவளகேசன் ஆகியோர் கரடியனாறு மற்றும் சந்திவெளி பொலிஸாருடன் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று மேற்கொண்டுள்ளனர் .

ஆவெட்டியாவெளியில் மாடு வளர்ப்பில் ஈடுபட்ட, சித்தாண்டியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான பத்மநாதன் மோகனதாஸ் ( 45) என்பவர்சனிக்கிழமை (16), மாலை உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று, பண்ணையை நோக்கி இரவு 09 மணியளவில் நடந்து செல்லும்போது ஈரளக்குளத்தில் வீதியோரமாக நின்ற யானையொன்றின் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்துடன், திகிலிவெட்டை, குளத்துவெட்டையை சேர்ந்த நாகராசா முரளிதரன் (31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையான நபர், நண்பர் ஒருவருடன் நள்ளிரவில் , வலைவீசி மீன் பிடிக்கச் சென்று அதிகாலை குளத்தின் ஓரமாக இருந்த மதுரை மரத்தின் கீழ் படுத்துறங்கிய போது யானையின் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார்.

இரு சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்