இலங்கை

கனடாவில் இலங்கையர்கள் அறுவர் கொடூரமாக கொலை: ஒட்டாவா நகர முதல்வர் வெளியிட்ட தகவல்

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் கொல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 இலங்கையர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அந்த நாட்டு நேரப்படி இன்று முற்பகல் 11 மணியளவில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டாவா நகர முதல்வரினால் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் அந்த நாட்டு அரசியல் தரப்பினர் மற்றும் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரட்ன வேறதுவ உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் சம்பவத்தில் உயிரிழந்த குறித்த 6 இலங்கையர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்காக கனடாவின் பால்மேடியா பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 இலங்கையர்கள் நேற்று முன்தினம் கொல்லப்பட்டனர்.

35 வயதுடைய தர்ஷனி ஏகநாயக்க என்ற தாயும் அவரது ஏழு வயதான மகன், நான்கு மற்றும் இரண்டு வயது நிரம்பிய இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மாதங்களேயான குழந்தை உள்ளிட்ட நான்கு பிள்ளைகளும் இவ்வாறு கொல்லப்பட்டனர்.

அத்துடன், குறித்த வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய காமினி அமரகோன் என்ற அவர்களது நண்பர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

கத்தி அல்லது அது போன்ற கூரிய ஆயுதத்தினால் இந்தக் கொலைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய ஃபெப்ரியோ டி சொய்சா என்ற இலங்கை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சந்தேகநபருக்கு எதிராக 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

6 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர் சார்பில் மன்றில் முன்னிலையாகுவதற்காக சட்டத்தரணி ஒருவரை ஏற்பாடு செய்வதற்காக வழக்கு விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில், ஒட்டாவா மேயர் மார்க் சட்க்ளிஃப் இந்த தாக்குதலை “எங்கள் நகர வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் வன்முறை சம்பவங்களில் ஒன்று” என்று கூறினார்.

38 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட கனடாவில் வெகுஜனக் கொலைகள் ஒப்பீட்டளவில் அரிதாகவே காணப்படுகின்றன. இருப்பினும், 2022 இரண்டு முக்கிய தாக்குதல்களைக் கண்டது. அந்த ஆண்டு டிசம்பரில், ரொறன்ரோ புறநகர்ப் பகுதியில் ஒரு நபர் ஐந்து பேரை சுட்டுக் கொன்றார்.

பல மாதங்களுக்கு முன்பு, செப்டம்பரில், மேற்கு மாகாணமான சஸ்காட்செவனில் ஒரு நபர் 11 பேரைக் கத்தியால் குத்திக் கொன்றார் . கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே கோகோயின் அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் அவர் உயிரிழந்தார்.

331 மில்லியன் மக்கள்தொகை கொண்ட அமெரிக்காவை விட இத்தகைய தாக்குதல்களின் விகிதம் மிகவும் குறைவு . 2023 ஆம் ஆண்டில், வடகிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெகுஜனக் கொலைகள் தரவுத்தளத்தின்படி, நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் என வரையறுக்கப்பட்ட 42 படுகொலைகள் நடந்தன.

2006 ஆம் ஆண்டிலிருந்து, தரவுத்தளமானது வெகுஜனக் கொலைகளைக் கண்காணிக்கத் தொடங்கிய ஆண்டிலிருந்து, இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் இரண்டாவது மிக அதிகமாக இருந்தது. 2019 ஆம் ஆண்டில், 46 தாக்குதல்கள் நடந்தன, இதில் 234 பேர் கொல்லப்பட்டனர்.

 

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்