அரச சேவையில் 50 வீதம் அதிருப்தி
அரச சேவை குறித்து மக்களின் கருத்து திருப்தி தருவதாக இல்லை எனவும் 50 சதவீதமான அரசாங்க ஊழியர்கள் குறித்து முறைப்பாடு கிடைத்து வருவதாகவும் அரசியல் சுனாமியால் அரசாங்கம் கவிழ்ந்தது போல அரசாங்க ஊழியர்களுக்கு எதிராக சுனாமி தலை தூக்கலாம் என விவசாய அபிவிருத்தி அமைச்சர் KD லால் காந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்
அரசு ஊழியர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாற தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கான முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றன சிலர் கோவைகளை பதுக்குகின்றனர் சிலர் இலஞ்சம் இன்றி வேலை செய்வதில்லை.
இவை போன்ற இன்னொரன்ன முறைப்பாடுகளின் பட்டியல் என்னிடம் தற்போது இருக்கிறது.
மக்களின் காணி நீர்ப்பாசன குறைபாடுகள் பற்றி அறிய மக்கள் குறைகேள் நிகழ்வு ஒன்றை நடத்தியதினோம் அதிலும் அரச ஊழியர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன.
எனவே அடுத்த சுனாமி அலை அரச சேவையாளர்களுக்கு எதிராக வரப்போகிறது, தயாராக இருங்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.