ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் சட்டவிரோத கிடங்கில் 250 உயிரிழந்த விலங்குகள் கண்டுபிடிப்பு

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து ஸ்பெயினில் ஒரு அசுத்தமான கிடங்கில் 250 இறந்த விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் குறித்து தள மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமேற்கு கிராமமான மெசன் டோ வென்டோவில் உள்ள சட்டவிரோத இடத்தில் விலங்குகள் சித்ரவதை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

28 சிவாவாக்கள் (chihuahuas) மற்றும் பறவைகள் உட்பட இறந்த விலங்குகளின் சிதைவுகள் வெவ்வேறு நிலைகளில் இருந்தன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்ட மக்காக்கள் (macaws) மற்றும் காகடூக்கள் (cockatoos) போன்ற வெளிநாட்டு பறவை இனங்கள் உட்பட 171 பிற விலங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

விலங்கு துஷ்பிரயோகம், உயிரினங்களை சட்டவிரோதமாக வைத்திருத்தல் மற்றும் தகுதியற்ற கால்நடை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தள மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!