மேற்கு கென்யாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் மரணம்
மேற்கு கென்யாவில்(Kenya) பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த துயரத்தில் மேலும் பலரை காணவில்லை என்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் எல்கியோ-மரக்வெட்(Elkeo-Marakwet) மாவட்ட காவல்துறைத் தளபதி பீட்டர் முலிங்கே(Peter Mulinge) குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய ஆண்டுகளில் கென்யாவில் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு மிக மோசமான சம்பவத்தில், மத்திய கென்யாவில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் 61 பேர் உயிரிழந்தனர்.
இந்த வாரம் அண்டை நாடான உகாண்டாவின்(Uganda) கிழக்கில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 13 பேர் உயிரிழந்ததாக உகாண்டா செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.





