இலங்கை செய்தி

நயினை அம்மனையும் வழிபட்ட ஜனாதிபதி!

  • January 16, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்துக்கு நேற்று சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்றும் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார். யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாக்களில் நேற்று ஜனாதிபதி பங்கேற்றதுடன், மக்களுடனும் சந்திப்புகளை நடத்தி இருந்தார். இன்று வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன், ஆன்மீக வழிபாடுகளிலும் ஈடுபட்டார். நயினாதீவுக்குக் விமானத்தில் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டார். விகாராதிபதியிடம் ஆசியும் பெற்றுக்கொண்டார். தையிட்டி உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார் என தெரியவருகின்றது. அதன்பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு […]

இந்தியா செய்தி

ஈரானில் சிக்கியுள்ள 16 இந்திய மாலுமிகள்: பிரதமருக்குக் குடும்பத்தினர் அவசரக் கோரிக்கை

  • January 16, 2026
  • 0 Comments

ஈரானின் புரட்சிக் காவல் படையினரால் (IRGC) சிறைபிடிக்கப்பட்டுள்ள ‘வேலியன்ட் ரோர்’ (Valiant Roar) கப்பலில் உள்ள 16 இந்திய மாலுமிகளை விரைவாக மீட்கக் கோரி, அவர்களது குடும்பத்தினர் பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த டிசம்பர் 8-ஆம் திகதி சர்வதேசக் கடல் பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி இந்தக் கப்பல் சிறைபிடிக்கப்பட்டது. எரிபொருள் கடத்தல் குற்றச்சாட்டை ஈரான் முன்வைத்துள்ள போதிலும், அதில் சல்பர் திரவமே இருந்ததாக மாலுமிகள் தரப்பு கூறுகிறது. தற்போது 10 மாலுமிகள் […]

இலங்கை செய்தி

நீதிமன்ற உத்தரவின் பேரில் 2,447 தரமற்ற டின் மீன்கள் அழிப்பு

  • January 16, 2026
  • 0 Comments

மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக கண்டறியப்பட்ட 2,447 டின் மீன்கள்  அவிசாவளை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று (16) அழிக்கப்பட்டன. டிசம்பர் 5, 2025 அன்று கொஸ்கம பகுதியில் நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நடத்திய சிறப்பு சோதனையின் போது, தரமற்ற டின் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பான வழக்கு இன்று அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றத்தை ஒப்புக்கொண்ட  தொழிலதிபருக்கு  20,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், பறிமுதல் செய்யப்பட்ட டின் மீன்களை அழிக்க […]

அரசியல் இலங்கை செய்தி

அமெரிக்க தூதுவர் விடைபெறுவதை பாற்சோறு சமைத்து கொண்டாடிய கம்மன்பில!

  • January 16, 2026
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் Julie Chang நாடு திரும்புவது தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலUdaya Gammanpila . நான்கு வருடகால சாபம் முடிவடைகின்றது எனவும், இது பாற்சோறு சமைத்து கொண்டாட வேண்டிய தருணம் எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று (16) விசேட ஊடக சந்திப்பை நடத்தியே கம்மன்பில இவ்வாறு கூறினார். அத்துடன், ஊடக சந்திப்பில் பாற்சோறு சாப்பிட்டு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். ஜுலி சங் 2022 பெப்ரவரி மாதம் முதல் […]

உலகம்

தென்கொரியாவில் குடிசை வளாகத்தில் பரவிய தீ! பலர் வெளியேற்றம்!

  • January 16, 2026
  • 0 Comments

தென் கொரியாவின் கங்னம் (Gangnam) மாவட்டத்தில் உள்ள குடிசை குடியிருப்பு வளாகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த  250 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி தீ விபத்தால் யாரும் காயமடையவில்லை என தீயணைப்பு துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன் சுமார் எட்டு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை செய்தி

ஒன்டன்செட்ரான் ஊசி மருந்து விவகாரம்: ஆய்வக அறிக்கை தாமதமாவது ஏன்

  • January 16, 2026
  • 0 Comments

சர்ச்சைக்குரிய ஒன்டன்செட்ரான் (Ondansetron) ஊசி மருந்து தொடர்பான ஆய்வக அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் இறுதியாக மௌனம் கலைத்துள்ளது. இந்த ஊசி மருந்து செலுத்தப்பட்ட இரு நோயாளிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 13-ஆம் திகதி அதன் நான்கு தொகுதிகள் மீளப்பெறப்பட்டன. இது குறித்த பரிசோதனைகள் சிக்கலானவை என்பதால் முடிவுகளை அவசரமாக வெளியிட முடியாது என ஆணையத்தின் தலைமை அதிகாரி டொக்டர் குமுது பண்டார தெரிவித்துள்ளார். தற்போது குறித்த மாதிரிகள் […]

அரசியல் இந்தியா

பா.ஜ.கவின் புதிய தேசிய தலைவர் யார்? 20 ஆம் திகதி வெளியாகிறது அறிவிப்பு!

  • January 16, 2026
  • 0 Comments

பாரதிய ஜனதாக் கட்சியின் (பா.ஜ.க.) BJP புதிய தேசிய தலைவர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா செயல்பட்டுவருகின்றார். இரு தடவைகள் அவர் இப்பதவியை வகித்துவிட்டார். அவருடைய தலைமைப் பதவி காலம் கடந்த வருடம் ஜூன் மாதம் 20 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இதனால் பா.ஜ.க. புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், இது விடயத்தில் பா.ஜ.க. மௌன […]

ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவில் 2025-ஆம் ஆண்டில் 197 பாதசாரிகள் பலி

  • January 16, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் பாதசாரிகள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் மட்டும் 197 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாகத் தேசிய சாலைப் பாதுகாப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது 2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். குறிப்பாக, நகர்ப்புறங்களில் பயன்படுத்தப்படும் கனரக வாகனங்கள் மற்றும் அவற்றில் பொருத்தப்பட்டுள்ள ‘புல் பார்கள்’ (Bull bars) விபத்துகளின் தீவிரத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. குறைந்த வேகத்தில் மோதினாலும், இந்த இரும்புத் தடுப்புகள் பாதசாரிகளின் தலை மற்றும் உடலில் […]

உலகம்

ஈரானின் அடக்கு முறையை நிவர்த்தி செய்ய அனைத்து வழிகளையும் பரிசீலிக்கும் அமெரிக்கா!

  • January 16, 2026
  • 0 Comments

ஈரானின் கொடூரமான அடக்குமுறையை நிவர்த்தி செய்ய “அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது ட்ரம்ப்  தூதர் மைக் வால்ட்ஸ் (Mike Waltz) இவ்வாறு கூறியுள்ளார். ஈரானில் வலுவடைந்துள்ள போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் இந்த விவகாரத்தில் போராட்டக்காரர்களுக்கான உதவிகள் வந்துக்கொண்டிருப்பதாக  ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை தூக்கிலிடமாட்டோம் என ஈரான் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் […]

இந்தியா

பா.ஜ.க.– சிவ சேனா கூட்டணி வசமாகிறது மும்பை மாநகராட்சி!

  • January 16, 2026
  • 0 Comments

முப்பை மாநகராட்சியை பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் சாத்தியம் உருவாகியுள்ளது. வாக்கெண்ணும் நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில் பா.ஜ.க. – சிவ சேனா கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று (15) நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 10 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மதியம் வரையிலான நிலைவரப்படி, மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 2 ஆயிரத்து 869 தொகுதிகளில் பாஜக-சிவ […]

error: Content is protected !!