உலகம்

சீனா மீதான அச்சம் : அமெரிக்காவிற்கே முதலிடம் எனக் கொக்கரிக்கும் ட்ரம்ப்!

  • January 16, 2026
  • 0 Comments

டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்காவிற்கே முதலிடம் என்ற கொள்கை  சீனாவின் உலகளாவிய செல்வாக்கு அதிகரித்து வருவதை குறிப்பிடுவதாக ஐரோப்பிய வெளியுறவு கவுன்சில் (ECFR) நடத்திய கணக்கெடுப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 21 நாடுகளில் கிட்டத்தட்ட 26,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், 54% அமெரிக்கர்களும் 53% ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களும் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ளனர். பெரும்பான்மையானவர்கள் அடுத்த பத்தாண்டுகளில் சீனா அதிக செல்வாக்கு மிக்கதாக இருக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளனர்.  அத்துடன் சீனாவை  எதிரியாகக் கருதுபவர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும்  இந்த […]

இலங்கை

பால் தேநீரின் விலை குறைப்பு!

  • January 16, 2026
  • 0 Comments

பால் தேநீரின் விலையை  குறைக்க அகில இலங்கை உணவகம் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்படி விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருகிறது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்மைய இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால்மா பொதிகளின் விலை 125 ரூபாவாலும், 400 கிராம் பால்மா பொதிகளின் விலை 50 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

AI தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி – லண்டன்வாசிகளுக்கு எச்சரிக்கை விடுத்த மேயர்!

  • January 16, 2026
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவின் விரைவான வளர்ச்சியை கட்டுப்படுத்தாவிட்டால் அது “வேலைவாய்ப்புகளை பெருமளவில் அழிக்கும் ஆயுதமாக” மாறக்கூடும் என்று லண்டன் மேயர் சாதிக் கான் (Sadiq Khan) எச்சரித்துள்ளார். மேன்ஷன் ஹவுஸில் பேசிய (Mansion House)  அவர் மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், லண்டனின் பணியாளர்களுக்கு, குறிப்பாக நிதி மற்றும் படைப்பாற்றல் தொழில்கள் போன்ற முக்கிய துறைகளில் AI அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது எனக் கூறியுள்ளார். இந்நிலையில் வேலைகளில் AI இன் தாக்கத்தை மதிப்பாய்வு செய்ய […]

பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவில் மீண்டும் மலர்ந்த “ரோஜா”!

  • January 16, 2026
  • 0 Comments

சினிமாவில் இருந்து அரசியல் களம் புகுந்த நடிகை ரோஜா, பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்குள் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளார். 90 களில் கனவு கன்னியாக வலம் வந்த ரோஜாவுக்கென ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் சாதித்து காட்டியவர் ரோஜா. தற்போது அவர் நடித்துள்ள படத்தின், புதிய “போஸ்டரை” படக்குழு வெளியிட்டுள்ளது. லெனின் பாண்டியன் படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார். இப் படத்தில் முக்கியமான திரையுலக நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பாடகர், […]

பொழுதுபோக்கு

‘மரகத நாணயம் 2’: வெளியானது அறிவிப்பு!

  • January 16, 2026
  • 0 Comments

2017-ம் ஆண்டு வெளியாக வெற்றி நடை போட்ட படங்களுள் ‘மரகத நாணயம்’. படமும் உள்ளடங்குகின்றது. பெரும் வரவேற்றை பெற்ற இப்படத்தின் 2ஆம் பாகம் தொடர்பில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் ‘மரகத நாணயம் 2’ தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அறிமுக வீடியோவினை லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். ஏ.ஆர்.கே சரவணன் இயக்கவுள்ள இப்படத்தில் ஆதி, சத்யராஜ், ப்ரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ் உட்பட பலர் நடிக்கவுள்ளனர். ஆகியோர் பணிபுரியவுள்ளனர். விரைவில் படப்பூஜையுடன் […]

உலகம் செய்தி

காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் மூத்த தலைவர் கொலை

  • January 15, 2026
  • 0 Comments

மத்திய காசா(Gaza) பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாவில்(Deir al-Bala) இஸ்ரேல்(Israel) நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஹமாஸின்(Hamas) ஆயுதப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் ஒருவர் டெய்ர் அல்-பலாவில் உள்ள குழுவின் ஆயுதப் பிரிவின் உள்ளூர் தளபதியான முகமது அல்-ஹோலி(Mohammed al-Holy) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அல்-ஹோலி குடும்பத்தின் மீதான தாக்குதலுக்கு ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் உயிரிழந்த மற்ற ஆறு பேரில் 16 வயது சிறுவனும் அடங்குவதாக […]

இலங்கை செய்தி

இலங்கையின் பழம்பெரும் பாடகர் ராஜு பண்டார காலமானார்

  • January 15, 2026
  • 0 Comments

இலங்கையின் மூத்த பாடகரும் இசைக்கலைஞருமான ராஜு பண்டாரா(Raju Bandara) தனது 65 வயதில் காலமானார். ராகமவில்(Ragama) உள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் இலங்கையின் இசைத்துறையில் நன்கு அறியப்பட்ட நபராக இருந்தார், பல தசாப்தங்களாக ஒரு பாடகர், இசையமைப்பாளர் மற்றும் மேடை கலைஞராக தனது வாழ்க்கையைக் கொண்டிருந்தார். ‘மா அதரேய் முழு லோவடத் வாடா'(Ma Adarei Mulu Lowatath Wada), ‘ரோசா மல் குமாரி'(Rosa Mal Kumari), ‘ரன் மலக் லேசா கெனா […]

இந்தியா செய்தி

சூரத்தில் காத்தாடி நூல் சிக்கி 8 வயது சிறுவன் பலி

  • January 15, 2026
  • 0 Comments

குஜராத்தின்(Gujarat) சூரத்(Surat), சைக்கிள் ஓட்டிச் சென்ற 8 வயது சிறுவனின் கழுத்தில் காத்தாடியின்நூல் சிக்கி உயிரிழந்துள்ளார். ரெஹான்ஷ் போர்ஸ்(Rehansh Pors) என அடையாளம் காணப்பட்ட சிறுவன், மற்றொரு குழந்தையுடன் கட்டிட வளாகத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கழுத்தில் நூல் வெட்டி உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் காத்தாடியின் நூல் தொடர்பான தொடர் மரணங்களின் சமீபத்திய சம்பவம் இதுவாகும். இதற்கு முன்னதாக கர்நாடகாவின்(Karnataka) பிதர்(Bidar) மாவட்டத்தில் 48 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் காத்தாடியின் நூலில் சிக்கி […]

உலகம் செய்தி

நியூ ஜெர்சியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளி பெண்

  • January 15, 2026
  • 0 Comments

அமெரிக்க(America) அதிகாரிகள் நியூ ஜெர்சியில்(New Jersey) 35 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கைது செய்து அவரது இரண்டு குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். விசாரணையில், நியூ ஜெர்சியின் சேர்ந்த பிரியதர்சினி(Priyadarshini Natarajan) நடராஜன் தனது இரண்டு குழந்தைகளின் மரணத்திற்குக் காரணமானவர் என்பது தெரியவந்துள்ளது. சமர்செட்(Somerset) கவுண்டி வழக்கறிஞர் ஜான் மெக்டொனால்ட்(John McDonald) ஒரு அறிக்கையில், ஜனவரி 13 அன்று குழந்தைகளின் தந்தை என்று நம்பப்படும் ஒருவர் சட்ட அமலாக்க நிறுவனத்திற்கு அழைப்பு […]

இந்தியா செய்தி

குஜராத்தில் 70 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மரணம்

  • January 15, 2026
  • 0 Comments

குஜராத்தின்(Gujarat) சூரத்(Surat ) மாவட்டத்தில் 70 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மகர சங்கராந்தி(Makar Sankranti) பண்டிகையை முன்னிட்டு ரெஹான்(Rehan) என்ற நபர் தனது மனைவி ரெஹானா(Rehana) மற்றும் 7 வயது மகள் ஆயிஷா(Ayesha) வெளியே சென்றுள்ளனர். மேம்பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த போது ​​ஒரு காத்தாடியின் நூல் திடீரென ரெஹானின் கழுத்தை சுற்றியுள்ளது. பின்னர் ஒரு கையால் நூலை அகற்ற முயன்றபோது ​​ரெஹான் மோட்டார் சைக்கிளின் […]

error: Content is protected !!