இலங்கை செய்தி

உலக பொருளாதார மாநாடு 19 ஆம் திகதி ஆரம்பம்: பிரதமர் ஹரிணி பங்கேற்பு!

  • January 13, 2026
  • 0 Comments

உலக பொருளாதாரமன்ற World Economic Forum மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் Switzerland டாவோஸ் Davos நகரில் ஆரம்பமாகின்றது. 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை சார்பில பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya பங்கேற்கின்றார். பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அவருடன் செல்கின்றனர். குறித்த விஜயத்தின்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார். முதலீட்டு […]

உலகம்

ஈரானில் அதிகரிக்கும் பதற்ற நிலையில் – சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

  • January 13, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் இன்று கச்சா எண்ணெயின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு பீப்பாய்க்கு 28 காசுகள் அல்லது 0.4 சதவீதம் உயர்ந்து $64.15 டொலராக  அதிகரித்துள்ளது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் 28 காசுகள் அல்லது 0.5 சதவீதம் உயர்ந்து 59.78 டொலராக அதிகரித்துள்ளது. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றான ஈரானில் அதிகரித்துள்ள உள்நாட்டு மோதல்கள் எண்ணெய் உயர்விற்கு பிரதானமாக பங்களித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையே […]

இலங்கை

4800 நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் அடையாளம் – செயற்கைக்கோள் தரவுகள் வெளியீடு!

  • January 13, 2026
  • 0 Comments

நாட்டில் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடிய 4,800 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிட்வா சூறாவளிக்குப் பிறகு நடத்தப்பட்ட செயற்கைக்கோள் அடிப்படையிலான மதிப்பீடுகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக  கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் குமாரி மீகஹகொடுவ தெரிவித்துள்ளார். இந்த வரைபடங்களின் பகுப்பாய்வில், ஊடகங்கள் மூலம் இதுவரை அறிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை விட உண்மையான நிலச்சரிவுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை செய்தி

ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்!

  • January 13, 2026
  • 0 Comments

இலங்கையில் நடந்த போரின்போது களமுனைச் செய்திகளை விவரணங்களாக எழுதிய, சர்வதேச புகழ்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் இன்று (13) காலமானார். இறக்கும்போது அவருக்கு 81 வயது என்பதுடன், அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 9.00 மணி முதல் தெஹிவளை அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படவுள்ளது. இறுதிச் சடங்குகள் இன்று (13) பிற்பகல் தெஹிவளை பெரிய பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்களிலும் இவர் […]

உலகம்

கனடாவில் பாரிய தங்கக்கொள்ளை – முக்கிய சூத்திரதாரி கைது!

  • January 13, 2026
  • 0 Comments

கனடா வரலாற்றில் மிகப்பெரிய தங்கக் கொள்ளையில் ஈடுபட்ட சூத்திரதாரிகளில் ஒருவரான அர்சலான் சவுத்ரி (Arsalan Chaudhary) டொராண்டோவின் பியர்சன் (Toronto’s Pearson) சர்வதேச  விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5000 இற்கும் அதிகமான திருட்டு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. “புராஜெக்ட் 24 காரட்”  (Project 24 Carat) என்று அழைக்கப்படும் பரந்த அளவிலான விசாரணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். சுமார் $15 மில்லியன் மதிப்புள்ள 6,600 […]

உலகம்

தனது சொந்த நலனுக்காக மற்ற நாடுகளை பகடைகாயாக்கும் அமெரிக்கா!

  • January 13, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தில் தனது நலன்களைப் பேணுவதற்கு அமெரிக்கா மற்ற நாடுகளை “சாக்குப்போக்காக” பயன்படுத்தக்கூடாது என்று சீனா குறிப்பிட்டுள்ளது. கிரீன்லாந்தை ரஷ்யா அல்லது சீனா கையகப்படுத்துவதைத் தடுக்க, அதை கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் கூறியுள்ள நிலையில் சீனாவின் கருத்துக்கள் வந்துள்ளன. இது தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ஆர்க்டிக்கில் சீனாவின் நடவடிக்கைகள் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, மேலும் […]

பொழுதுபோக்கு

விழிகளுக்கு விருந்தளிக்க வருகிறாள் “தாய் கிழவி”!

  • January 13, 2026
  • 0 Comments

எதிர்வரும் 20 ஆம் திகதி திரையிடப்படவுள்ள “தாய் கிழவி” படம் தொடர்பில் புதிய ‘அப்டேட்’ வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் செயற்கைக்கோள் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது என படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ராதிகா நடித்துள்ள புதிய படம் ‘தாய் கிழவி’.   இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 […]

உலகம் செய்தி

ட்ரம்பிற்கு பதிலடி கொடுத்த கியூபா : பேச்சுவார்த்தைகள் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்!

  • January 13, 2026
  • 0 Comments

வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பை தொடர்ந்து கியூபா காலதாமதமின்றி உடன்பாடு ஒன்றை எட்ட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்டுள்ள கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கேனல் (Miguel Díaz-Canel) தனது நிர்வாகம் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தாது எனக் கூறியுள்ளார். “அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையிலான உறவுகள் முன்னேற, அவை விரோதம், அச்சுறுத்தல்கள் மற்றும் பொருளாதார வற்புறுத்தலை விட சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்” என்று கியூப […]

இலங்கை செய்தி

16 ஆம் திகதி விடைபெறும் அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

  • January 13, 2026
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chang , ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை Anura Kumara Dissanayake சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி கொழும்பில் இருந்து வெளியேறுகின்றார் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங். இந்நிலையில் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார். இதன்போது, ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி […]

உலகம்

ஈரானோடு வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும்!

  • January 13, 2026
  • 0 Comments

ஈரானுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் 25% வரி விதிக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வரி நேற்று முதல் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது. “அதிகரித்து வரும்” போராட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கோள் காட்டி அந்நாட்டில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்க குடிமக்கள் தொடர்ந்து இணையத் தடைகளை எதிர்பார்க்க வேண்டும்,. மாற்றுத் தொடர்பு வழிகளைத் திட்டமிட […]

error: Content is protected !!