உலகம்

பாகிஸ்தானில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள் – 24 பேர் பலி, பலர் படுகாயம்!

  • January 17, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற தனித்தனி சாலை விபத்துகளில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், 45 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா (Sargodha) நகரில் முதல் விபத்து ஏற்பட்டது. பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் சென்ற லொறி மூடுப்பனி காரணமாக சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 09  பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மக்ரான் கடலோர நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து […]

செய்தி விளையாட்டு

நியூசிலாந்து தொடர் – இந்திய அணியில் இணையும் புதிய வீரர்கள்

  • January 17, 2026
  • 0 Comments

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், தற்போது இரண்டு ஒருநாள் போட்டிகளை முடிவடைந்துள்ளது. இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் உள்ளது. இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணி வீரர்கள் திலக் வர்மா(Tilak Verma) மற்றும் வாஷிங்டன் சுந்தர்(Washington Sundar) விலகியுள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு மாற்று வீரர்களாக ஸ்ரேயாஸ் அய்யர்(Shreyas Iyer) மற்றும் ரவி […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

இங்கிலாந்தில் இலவச பேருந்து பயண திட்டத்திற்கு அழைப்பு!

  • January 17, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் 22 வயதுக்குட்பட்ட அனைத்து தனிநபர்களுக்கும் இலவச பேருந்து பயணத்தை வழங்க பசுமைக் கட்சி இன்று அழைப்பு விடுத்துள்ளது. வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்று கட்சித் தலைவர் சாக் போலன்ஸ்கி (Zack Polanski) தெரிவித்துள்ளார். யுனிவர்சல் பஸ் பாஸ் திட்டம் ( universal bus pass scheme) சுயநிதியாக இருக்கும் என்று கட்சி பரிந்துரைத்துள்ளது.  அதிகரித்த பேருந்து பயன்பாடு பொருளாதார ஊக்கத்தை அளிக்கும் என்றும்  அக்கட்சி […]

புகைப்பட தொகுப்பு

90 களின் கனவு கன்னி – வைரலாகும் புகைப்படங்கள்

  • January 17, 2026
  • 0 Comments

தை திருநாளான தமிழ் புத்தாண்டன்று நடிகை மீனா பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 90 களில் தொடங்கி, 2000 கள் வரை தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டிப் பறந்து கொண்டு இருந்த நடிகை மீனா தனது திருமணத்திற்கு பின்னர் குறிப்பிட்ட கதைகளில் மட்டும் நடிக்கத் தொடங்கினார். இன்றைக்கும் மீனா நடிக்கிறார் என்றால் அந்த படத்தின் மீது […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

கொடூரமான கொலைகளை முதன்முறையாக ஒப்புக்கொண்ட ஈரான் அரசு

  • January 17, 2026
  • 0 Comments

ஈரானில் அண்மை காலமாக நடைபெற்ற போராட்டங்களின் போது, ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) முதன்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். சனிக்கிழமை கருத்து தெரிவித்த அவர் போராட்டங்களின் போது பலர் உயிரிழந்ததாகவும், சிலர் மனிதாபிமானமற்ற, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த உயிரிழப்புகளுக்கு அமெரிக்காவே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஈரானிய மனித உரிமைகள் அமைப்பான HRANA வெளியிட்டுள்ள […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

லண்டனில் உள்ள ஈரானிய தூதரகம் முன் போராட்டம் – பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டதால் பரபரப்பு!

  • January 17, 2026
  • 0 Comments

லண்டனில் உள்ள ஈரானிய தூதரகத்திற்கு முன்பு இடம்பெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறிய நிலையில் காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று மாலை குறித்த போராட்டங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதில் நான்கு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வன்முறை சீர்குலைவு மற்றும் அத்துமீறல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் எதிர்பாளர் ஒருவர் தூதரகத்தில் ஏற்பட்டிருந்த ஈரானிய கொடியை அகற்ற முனைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

சிறையில் அடைத்தால்கூட அஞ்சமாட்டோம்: ஜனாதிபதியின் சொந்த ஊரில் முழங்கிய நாமல்!

  • January 17, 2026
  • 0 Comments

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். எம்மை சிறையில் அடைத்தாலும் அரசியல் பயணம் தொடரும் எனவும் அவர் கூறினார். அநுராதபுரம், தம்புத்தேகமயில் இன்று (17) நடந்த அரசியல் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு சூளுரைத்தார். 1988 மற்றும் 1989 களில் போட்ட ஆட்டத்தை எங்களிடம் போட வரவேண்டாம் எனவும் அவர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியா திவாலாகவில்லை – கன்சர்வேடிவ் கட்சி ஒன்றுபட்டுள்ளதாக பாடெனோக் அறிவிப்பு

  • January 17, 2026
  • 0 Comments

உலகின் மிக வெற்றிகரமான மற்றும் வலுவான நாடுகளில் ஒன்றாக பிரித்தானியா இருப்பதாக கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி பாடெனோக் (Kemi Badenoch) தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரொபர்ட் ஜென்ரிக் (Robert Jenrick) கன்சர்வேடிவ் கட்சியை விமர்சித்து, சீர்திருத்த UK கட்சியில் இணைந்தமை குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார். வாக்காளர்களிடம் நாடு திவாலாகிவிட்டது என கூறுவது அவர்களை விரக்தியடையச் செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார். சீர்திருத்த UK கட்சி குறித்து கருத்து தெரிவித்த அவர், அந்தக் கட்சி எதிர்மறை […]

இந்தியா செய்தி

நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- மோடிக்கு சவால் விடுக்கும் திரிணாமுல் காங்கிரஸ்

  • January 17, 2026
  • 0 Comments

பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து, மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைவதை தடுப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசை இந்திய பிரதமர் மோடி நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மம்தா பானர்ஜி அரசு கொடுமையான மற்றும் இரக்கமற்றது எனவும் அவர் விமர்சித்திருந்தார். இந்நிலையில் இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் பிரதமர் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2021 […]

உலகம்

ஈரான் போராட்டம் – 3000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

  • January 17, 2026
  • 0 Comments

ஈரானில் நடந்த போராட்டங்களில் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் 2,885 பேர் போராட்டக்காரர்கள் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட  மனித உரிமைகள் அமைப்பொன்று  தெரிவித்துள்ளது. இதற்கிடையில், எட்டு நாட்களாக அமலில் இருந்த சர்வதேச முற்றுகை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டங்கள் தற்போது குறைந்து வருவதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகளும் குறிப்பிடுகின்றன.

error: Content is protected !!