இலங்கை செய்தி

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் சாந்தனுக்கு அஞ்சலி

  • February 29, 2024
  • 0 Comments

சாந்தனுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக சாந்தன் நேற்று தமிழகத்தில் உயிரிழந்துள்ளார். இதன்படி சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜாவிற்கு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. இளைஞர்களின் ஏற்பாட்டில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி பதாதைகளுடன் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சாந்தனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

“சால்வையை பறித்து எறிந்தது தவறு தான்” சிவகுமார் என்ன கூறுகின்றார் தெரியுமா?

  • February 29, 2024
  • 0 Comments

காரைக்குடியில் ஒரு வயதான நபர் கொடுத்த சால்வையை பறித்து தூக்கி எறிந்த சம்பவத்திற்காக நடிகர் சிவகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது நண்பர் என்று கூறி அவரை அருகில் வைத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவகுமார், பொது இடங்களில்  நடந்து கொள்ளும் விதம் சர்ச்சையாகி வருகிறது. முன்பு இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றபோது செல்போனை தட்டிவிட்டார். இது சர்ச்சையாக வருத்தம் தெரிவித்தார் சிவகுமார். அதேப்போல் மற்றொரு நிகழ்விலும் செல்பி […]

வாழ்வியல்

மருக்கள் மறையவில்லையா? இலகுவாக மறைய வைக்க வழிமுறைகள்

  • February 29, 2024
  • 0 Comments

சருமத்தில் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று மருக்கள். இந்த மருக்கள் தற்போது அனைத்து வயதினருக்கும் காணப்படுகிறது. சிலர் இதன் தொந்தரவால் மருத்துவமனைகளுக்கு கூட செல்வார்கள் ஆனால் நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்த எவ்வாறு குணப்படுத்தலாம் மற்றும் இந்த மருக்கள் ஏன் வருகிறது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். காரணங்கள்: இது ஒரு வைரஸ் கிருமி தொற்றால் ஏற்படுகிறது. குறிப்பாக HPV வைரஸ் (ஹியூமன் பாபிலோனா வைரஸ் )இதுதான் மருக்கள் ஏற்பட காரணம் ஆகிறது. முகம், […]

செய்தி

இலங்கைக்கு மே மாதம் வரை காத்திருக்கும் நெருக்கடி!

  • February 29, 2024
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரையில் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் 36.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இன்றும் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படும் விசா விண்ணப்பங்கள் – நிராகரிக்கும் அதிகாரிகள்

  • February 29, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் புதிய குடிவரவு சீர்திருத்தங்களின் கீழ், ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு 5 சர்வதேச மாணவர் விசா விண்ணப்பங்களில் ஒன்று நிராகரிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இந்நிலைமையால் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர் வீசா விண்ணப்பதாரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் சுமார் 30 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கான ஒரு முக்கிய வழியாக மாணவர் விசா அறியப்படுகிறது. எவ்வாறாயினும், கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பின்னர் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தத்துடன், ஆஸ்திரேலியாவால் […]

உலகம்

Instagram இல் பதிவிடுவதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் பிரபலங்கள்

  • February 29, 2024
  • 0 Comments

பிரபல சமூக ஊடக தளமான Instagramஇல் புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. Instagramஇல் ஒரு பதிவிற்கான சராசரி கட்டணமாக இது கருதப்படுகிறது. அதன்படி, ஒரு பதஜவு வெளியிடுவதன் மூலம், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 3,234,000 டொலர் பெறுவார் எனவும் இது ஒரு பிரபலம் பெற்ற அதிகபட்ச தொகையாகும். மேலும், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி Instagram பதிவிற்காக 2,597,000 டொலர் பெறுவதாக கூறப்படுகிறது. அதிகம் சம்பாதிக்கும் முதல் […]

விளையாட்டு

காயத்தால் ராகுல் விளையாடுவதில் சிக்கல்!

  • February 29, 2024
  • 0 Comments

இங்கிலாந்து – இந்தியா மோதும் 5வது டெஸ்டில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக கே.எல்.ராகுல் ஆடுவது கேள்விக்குறியாகியுள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அதிர்ச்சியை கொடுத்தது. அடுத்து 2வது டெஸ்டில் 106 ரன்கள், 3வது டெஸ்டில் 434 ரன்கள், 4வது டெஸ்டில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் […]

அறிந்திருக்க வேண்டியவை

லீப் ஆண்டு என்றால் என்ன? 366 நாள்கள் இடம்பெற காரணம்?

  • February 29, 2024
  • 0 Comments

வழக்கமாக ஒவ்வோர் ஆண்டிலும் 365 நாள்கள் உள்ளன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் லீப் ஆண்டில் மட்டும் வழக்கத்திற்கு மாறாக 366 நாள்கள் இருக்கின்றன. இவ்வாண்டு (2024) லீப் ஆண்டாகும். லீப் ஆண்டில் 366 நாள்கள் இடம்பெற என்ன காரணம்? பூமி சூரியனைச் சுற்றிவரும் காலத்தைத்தான் ஓர் ஆண்டு குறிக்கிறது. அதற்கு 365.2422 நாள்கள் ஆகின்றன. கணக்கிட்டுப் பார்க்கும்போது 365 நாள்களை விட அது சுமார் 6 மணி நேரம் அதிகம். 4 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் அது […]

ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் வீதியில் சென்ற நபருக்கு மர்ம நபர்கள் செய்த அதிர்ச்சி செயல்

  • February 29, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பரிஸின் 18 ஆம் வட்டாரத்தில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் வீதியில் நடந்து சென்ற குறித்த நபரை வழிமறித்த இரு கொள்ளையர்கள், குறித்த நபரை கத்தியால் தாக்கியுள்ளார். சரமாரியாக இந்த தாக்குதலில் அவர் நிலைகுலைந்து விழுந்தார். அவரிடம் இருந்த சில பொருட்களை திருடிக்கொண்டு அங்கிருந்து இரு கொள்ளையர்களும் தப்பி ஓடியுள்ளனர். பின்னர் மருத்துவக்குழு அழைக்கப்பட்டு தாக்குதலுக்கு இலக்கான நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை […]

செய்தி வட அமெரிக்கா

நியூயோர்க் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – இலவசமாக கற்க வாய்ப்பு

  • February 29, 2024
  • 0 Comments

நியூயோர்க் மருத்துவ கல்லூரியில் தற்போதைய மற்றும் வருங்கால மாணவர்கள் ரூத் கோட்ஸ்மேன் என்பவரால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் டொலர் நன்கொடையின் மூலம் இலவச கல்வியைப் பெறுவார்கள். இது அமெரிக்காவில் இதுவரை வழங்கப்படாத மிகப்பெரிய பரிசாகும். நியூயோர்க் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரி ஒரு பணக்காரரிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் நன்கொடை பெற்றுள்ளது. இதனால் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை இரத்து செய்திருப்பதாக கல்லூரியின் தாய் நிறுவனமான நியூயார்க் மெடிக்கல் ஸ்கூல் தெரிவித்துள்ளது. இந்த நன்கொடை […]

error: Content is protected !!