இலங்கை

வடமாகாணத்தில் தனியார் பஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

  • February 29, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தனியார் பஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நீண்ட தூரம் மற்றும் குறுகிய பயணங்களை மேற்கொள்ளும் அனைத்து தனியார் பஸ் சாரதிகளும் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதற்கமைய தனியார் பஸ் சாரதிகள் யாழ்.டிப்போவிற்கு முன்பாக சென்று கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். நிரந்தர பேருந்து நிறுத்தம் கோரி அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுக்காமலேயே நிராகரிக்க நீதிமன்றம் முடிவு!

  • February 29, 2024
  • 0 Comments

இணையவழி அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு ஜனாதிபதியின் சட்டத்தரணி M.A. சுமந்திரன் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்க உயர் நீதிமன்றம் இன்று (29.02) தீர்மானித்துள்ளது. பிரியந்த ஜயவர்தன,  ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்றக் குழுவினால் இந்தத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட் முன்வைத்த திருத்தங்கள் இதில் இடம்பெறாத காரணத்தினால் சட்டப்பூர்வமாக சட்டமூலம் நிறைவேற்றப்படவில்லை என தீர்ப்பு […]

வட அமெரிக்கா

ராணுவத்தில் 5 சதவீதத்தை குறைக்க அமெரிக்க முடிவு

  • February 29, 2024
  • 0 Comments

அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதத்தை குறைக்க பைடன் அரசாங்கம் முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகின்றது. உலகில் சக்தி வாய்ந்த ராணுவ படைகளை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்க தரைப்படையில் 4 லட்சத்து 50 ஆயிரம் வீரர்களும், 50 ஆயிரம் ரிசர்வ் படைவீரர்களும் பணி புரிந்து வருகின்றனர். இந்தநிலையில் அமெரிக்க ராணுவத்துக்கான நிதியில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த நாட்டு நாடாளுமன்றம் கூறியுள்ளது. இதனால் ராணுவத்தில் ஆட்குறைப்பு செய்ய அரசு முடிவு செய்து அதனை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. […]

ஆசியா

ஆத்திரத்தை தூண்டிய கேள்வி… டிவி லைவ் ஷோவில் காமெடியனை அறைந்த பாகிஸ்தான் பாடகி!

  • February 29, 2024
  • 0 Comments

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகி ஷாஜியா மன்சூர், டிவி லைவ் ஷோவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது, அவருடன் உரையாடிய காமெடி நடிகர் ஷெர்ரி நன்ஹாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அவரை தாக்குவது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஹனிமூன் குறித்து காமெடி நடிகர் ஷெர்ரி நன்ஹா நகைச்சுவையாக பேசுவதும், பின்னர் அவர் தாக்கப்படுவதும் பதிவாகி உள்ளது. “ஒருவேளை நமக்கு திருமணம் ஆனால், நமது ஹனிமூனுக்கு உங்களை உடனடியாக மான்டே கார்லோவுக்கு அழைத்துச் செல்வேன். நீங்கள் […]

ஆசியா

தென் கொரியாவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை!

  • February 29, 2024
  • 0 Comments

தென்கொரியாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் இன்று (29.02) பணிக்கு திரும்பவில்லை என்றால் அவர்களின் மருத்து உரிமம் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல், நாட்டின் ஜூனியர் டாக்டர்களில் 75% பேர் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவக் கல்லூரிகளுக்கு அதிக மாணவர்கள் சேர்க்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். நாட்டில் மருத்துவர்களின் […]

ஐரோப்பா

கருக்கலைப்பு உரிமைக்கு பிரெஞ்சு செனட் சபை ஒப்புதல்!

  • February 29, 2024
  • 0 Comments

கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்புச் சட்டமாக்குவதற்கான முன்மொழிவுக்கு பிரெஞ்சு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் மேல் சபையான செனட் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 267 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் கிடைத்துள்ளன. கருக்கலைப்பு 1974 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் சட்டப்பூர்வமாக உள்ளது மற்றும் அரசியலமைப்பின் மூலம் அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பான தீர்மானம் ஐந்தில் மூன்று பெரும்பான்மையுடன் […]

இலங்கை

பெலகடியாகொட ஹொரவல பிரதேசத்தில் நடுவீதியில் ஒருவர் வெட்டிக் கொலை

  • February 29, 2024
  • 0 Comments

வெலிபென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலகடியாகொட ஹொரவல, பிரதேசத்தில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.பலகட்டியகொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். உயிரிழந்த நபர் பெலகடியாகொட பிரதேசத்தில் பிரதான வீதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது இருவரில் ஒருவர் குறித்த நபர் மீது திடீரென கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் கத்தி குத்துக்கு இலக்கான நபர் படுகாயத்துடன் அருகில் உள்ள வீட்டுக்கு ஓடியுள்ளார்.அதன்பின், வீட்டின் […]

பொழுதுபோக்கு

விஜய்யைத் தொடர்ந்து அரசியலில் குதிக்க நேரம் பார்க்கும் பாலிவூட்டின் “தலைவி”

  • February 29, 2024
  • 0 Comments

பாலிவுட்டின் பிசியான நடிகை கங்கனா ரணாவத் பாஜக ஆதரவு நடிகைகளில் முக்கியமானவர். டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கங்கனா அரசியலில் இறங்குவது பற்றிய அவரது கருத்தைத் தெரிவித்துள்ளார். “இந்த நாடு எனக்கு எவ்வளவோ தந்திருக்கிறது. அதைத் திருப்பிக் கொடுக்க நான் மிகவும் பொறுப்பாக உணர்கிறேன். நான் எப்போதும் ஒரு தேசியவாதியாகவே இருந்து வருகிறேன். அந்த இமேஜ் எனது புகழ் பெற்ற நடிப்பு வாழ்க்கையையும் எடுத்துக் கொண்டது. நான் ஆழமாக நேசிக்கப்படுகிறேன், பாராட்டப்படுகிறேன் என்ற விழிப்புணர்வு […]

செய்தி மத்திய கிழக்கு

சவூதியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை – உலகில் முதலாவதாக மெய்நிகர் சுற்றுலா முறை அறிமுகம்

  • February 29, 2024
  • 0 Comments

உலகின் முதல் தேசிய கலாச்சார மெட்டாவெர்ஸ் தளத்தினை சவூதி கலாச்சார அமைச்சு அறிமுகப்படுத்தியது. இது பயனர்களுக்கு மெய்நிகர் (Virtual Reality) வரலாற்று, உல்லாசப் பயணங்களில் பங்கேற்க உதவுகிறது. மெட்டாவெர்ஸ் இன் இந்த அற்புதமான கண்டுபிடிப்பானது ஜெனரேட்டிவ் மீடியா இன்டலிஜென்ஸ் (GMI) எனும் செயற்கை நுண்ணறிவு அமைப்பு மூலம் மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. GMI உடன் இணைந்து ஹைப்பர்லெட்ஜர் ஃபேப்ரிக் 2.5 பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி droppGroup மற்றும் ‘phygital’ metaverse உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அற்புதமான தளம் […]

உலகம்

ஓட்டுநர் இல்லாத வாகனங்களை அறிமுகம் செய்யும் Nissan!

  • February 29, 2024
  • 0 Comments

ஜப்பானில் ஓட்டுநர் இல்லாத டாக்சிகளை அறிமுகம் செய்ய Nissan நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய சேவையை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகியுள்ளது. தோக்கியோவின் தெற்கே யொக்கொஹாமா பகுதியில் சிறிய வேன்களைக் கொண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சோதனை நடத்தவிருப்பதாக நிறுவனம் அறிவித்தது. மூப்படையும் சமுதாயத்தால் ஓட்டுநர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாய் Nissan குறிப்பிட்டது. புதிய சேவைகளை வழங்கும் முயற்சியில் உள்ளூர் ஆணையங்களுடனும் போக்குவரத்து நிறுவனங்களுடனும் பணிபுரியவிருப்பதாய் Nissan சொன்னது. சாலைகளில் தானியக்க வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கிறது […]

error: Content is protected !!