ஐரோப்பா

புட்டினுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிடும் போரிஸ் நடேஷ்டின்

ரஷ்யாவின் அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட போதுமான கையெழுத்துகளை சேகரித்ததாக கிரெம்ளின் போட்டியாளர் போரிஸ் நடேஷ்டின் தெரிவித்துள்ளார்.. தேவையான 100,000 கையெழுத்துக்களை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக நடேஷ்டின் தெரிவித்துள்ளார்.. அவரது விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட கையொப்பங்களில் ஏதேனும் “முறைகேடுகள்” கண்டறியப்பட்டால், கமிஷன் வேட்பாளரை முழுவதுமாக தகுதி நீக்கம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை

கெஹலிய கோ விலேஜ் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது!

  • January 31, 2024
  • 0 Comments

கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கோரி ‘கெஹலிய கோ விலேஜ்’ என்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இம்யூனோகுளோபுலின் மருந்து தொடர்பான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, குறித்த மருந்து தொடர்பான வழக்கு தொடர்பில் இரண்டாவது தடவையாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வாக்குமூலங்களைப் பெறுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக […]

ஐரோப்பா

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பெண்களின் கருக்கலைப்பு உரிமை தொடர்பான மசோதா தாக்கல்

  • January 31, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது பிரான்ஸில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகள் நிலைநாட்டப்படும் என இனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உறுதி அளித்தார். இதன்படி பெண்களின் கருக்கலைப்பு உரிமை தொடர்பான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நிறைவேறியது. இதன்பிறகு இந்த மசோதா செனட் சபைக்கு அனுப்பப்படும். அங்கு பெரும்பான்மை பெற்றால் இது சட்டமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை

தெற்கிலே ஒரு சட்டம் வடக்கிலே ஒரு சட்டம் என்றால் வடக்கு கிழக்கினை தனிநாடாக அறிவிக்க வேண்டும் – கோவிந்தன் கருணாகரம் கேள்வி

  • January 31, 2024
  • 0 Comments

தெற்கிலே ஒரு சட்டம் வடக்கிலே ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என்றால் ஏன் இந்த நாடு ஒன்றுபட்டதாக இருக்கவேண்டும்.வடக்கு கிழக்கினை பிரித்து தனிநாடாக வழங்கவேண்டியதுதானே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் கேள்வியெழுப்பியுள்ளார். ஒரே நாட்டுக்குள் ஒரே சட்டத்தினை பேணிப்பாதுகாக்கமுடியாவிட்டால் ஒரே நாடு தேவையில்லை என்ற நிலைமைக்கு எங்களை தள்ளிவிடுகின்றீர்கள் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு தை மாதம் 28ஆம் திகதி […]

இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 115 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு : நிதியை கையாள்வது தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

  • January 31, 2024
  • 0 Comments

2024 வருடத்திற்குரிய வரவு செலவுத்திட்டத்தினூடாக முறையான கிராமிய அபிவிருத்தி மூலம் பிரதேச ஏற்றத் தாழ்வுகளை குறைத்து நாட்டின் நிலையான அபிவிருத்தியை இலக்காக கொண்டதுடன் வலுவான கிராமிய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலமாக பாரிய பொருளாதார இலக்கினை அடைந்து தேசிய பணிக்கு பங்களிப்பு செய்தல் எனும் நோக்கில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 115 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரிகளை தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச […]

இலங்கை

பாடசாலை மாணவரொருவர் உயிரிழப்பு : பொலிஸார் தீவிர விசாரணை

ஹட்டன் லெதண்டி பகுதியில் 15 வயது பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவர் தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹட்டன் பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசியா

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் பகுதியில் உள்ள சிறையைத் தகர்க்க தீவிரவாதிகள் முயற்சி…15 பேர் சுட்டுக்கொலை!

  • January 31, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் சிறையைத் தகர்க்கும் முயற்சியாக, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உட்பட 15 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தென்கிழக்கு மாகாணங்களில் ஒன்றான பலூசிஸ்தான் பகுதியில் மாக் என்ற இடத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. கடந்த 29 மற்றும் 30ம் திகதிகளில் இந்த சிறைச்சாலையை தகர்க்கும் முயற்சியாக, துப்பாக்கிகள், சிறிய ரக ராக்கெட்டுகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்கள் கொண்டு தொடர் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. தீவிரவாதிகள் நடத்திய […]

இலங்கை

கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சீஷெல்ஸ் படகு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது!

  • January 31, 2024
  • 0 Comments

கடற்கொள்ளையர்களிடம் இருந்து சீஷெல்ஸ் கடற்படையினரால் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேர் மற்றும் படகு இன்று (31) பத்திரமாக அந்நாட்டின் தலைநகர் விக்டோரியா துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று கடற்கொள்ளையர்களுடன். 06 மீனவர்களுடன் திக்விட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட “லோரன்சோ சோன் 04” என்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் கடந்த 27ஆம் திகதி அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, சீஷெல்ஸ் கடற்படையினர் 6 மீனவர்களுடன் கப்பலை பாதுகாப்பாக மீட்டனர் மற்றும் […]

இலங்கை

விடுமுறையை கழிக்க சிறந்த இடம் இலங்கை : ஜெய்சங்கர்!

  • January 31, 2024
  • 0 Comments

இந்தியர்கள் விடுமுறையைக் கழிக்க விரும்பினால், அதற்கு உகந்த இடமாக இலங்கை இருக்கும் என இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.   ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்திய மேலாண்மைக் கழகத்தில் விரிவுரை ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இந்தச் சான்றிதழை வழங்கினார். இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையுடனான நெருக்கம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை, இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “75 வருடங்களுக்கு அப்பால் 2024 ஆம் ஆண்டுக்கான […]

ஐரோப்பா

போர்க் கைதிகளின் உடல்களை ரஷ்யா ஒப்படைக்கவில்லை: உக்ரைன் குற்றச்சாட்டு

பெல்கோரோட் பகுதியில் இராணுவ விமான விபத்தில் இறந்ததாக மாஸ்கோ கூறுகின்ற உக்ரேனிய போர்க் கைதிகளின் உடல்களைத் திருப்பித் தர ரஷ்யா விருப்பம் காட்டவில்லை என்று உக்ரேனிய இராணுவ உளவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 65 உக்ரேனிய வீரர்கள் ரஷ்ய இராணுவ விமானத்தில் உயிரிழந்துள்ளனர். இது கடந்த புதன் கிழமை ரஷ்யாவின் பெல்கோரோடில் எல்லைக்கு அருகில் விழுந்து நொறுங்கியதாக மாஸ்கோ கூறுவதை ஆதரிக்க எந்த ஆதாரத்தையும் மாஸ்கோ வழங்கவில்லை என்று கிய்வ் கூறியுள்ளது. இந்நிலையில் மாஸ்கோ, விமானம் உக்ரைனால் […]