ஐரோப்பா

பிரித்தானியாவில் தற்காலிகமாக மூடப்படும் 150 பள்ளிகள்..!

பிரித்தானியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக கிட்டத்தட்ட 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கோடை விடுமுறைகள் நிறைவடைந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இதற்கிடையில் பிரித்தானியாவில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மோசமான கான்கிரீட் தள கட்டிடங்களில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இத்தகைய பள்ளி கட்டிடங்கள் எப்போது வேண்டும் என்றாலும் இடிந்து விழுந்து விடலாம் என்ற அபாயத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பிரித்தானியாவில் மோசமான கட்டிடங்களில் செயல்படும் 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

பள்ளிகளின் இந்த தற்காலிக மூடல் காரணமாக மாணவர்கள் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாற்று இடத்தில் செயல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரித்தானியாவின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கில்லியன் கீகன் தெரிவித்துள்ளார்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!