இலங்கை: மாங்குளத்தில் கண்ணிவெடி வெடித்ததில் 04 பேருக்கு நேர்ந்த கதி!
முல்லைத்தீவு மாங்குளத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அரச சார்பற்ற நிறுவனமொன்றின் ஊழியர்கள் கண்ணிவெடி வெடித்ததில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளால் உள்நாட்டுப் போரின் போது அப்பகுதியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அரச சார்பற்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது.
காயமடைந்த தொழிலாளர்கள் முதலில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
(Visited 19 times, 1 visits today)





