சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் நோய்ப்பரவல்
சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா சம்பவங்கள் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அது இயல்பான ஒன்றுதான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்திருப்பதைச் சுகாதார அமைச்சின் அண்மைய வாராந்திரக் கணக்கு காட்டியது.
கடந்த மாதத் தொடக்கத்திலிருந்தே எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மூன்றாவது வாரத்தில் சுமார் 14,000ஆக இருந்த எண்ணிக்கை மார்ச் கடைசி வாரத்தில் 28,000ஐத் தாண்டி இரண்டு மடங்கானது.
மருந்தகங்களும் அதிகமான நோயாளிகளைச் சந்திக்கின்றன. வெளியில் செல்வது அதிகரிப்பதால் எண்ணிக்கை கூடுவது இயல்புதான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நிலைமையைச் சமாளிக்க மருந்தகங்கள் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை தரும் வகையில் கூடுதல் மருந்துகளை வாங்கி வைக்கின்றன.
எண்ணிக்கை இரட்டிப்பானாலும் பெரும்பகுதி மிதமான அறிகுறிகளே தென்படுவதாகவும் தொடர்ந்து உயர்ந்து பிறகு நிலைமை சீரடையும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.