காற்றின் தரத்தில் கடுமையான பாதிப்பு – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றின் தரம் உணர்திறன் மிக்க குழுக்களுக்கு ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இளம் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





