உலகம் செய்தி

கம்போடியா போர் நிறுத்தத்தை மீறியதாக தாய்லாந்து குற்றச்சாட்டு

போர் நிறுத்த ஒப்பந்தத்தை கம்போடியா மீறியதாக தாய்லாந்து இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.

பல வாரங்களாக இடம்பெற்ற கடுமையான மோதல்களால் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய பின்னர், இரு நாடுகளிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு, கம்போடியா 250 க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதாக தாய்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நண்பகல் (முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இரு நாடுகளும் முன் வரிசைகளை முடக்கவும், வலுவூட்டல்களைத் தடை செய்யவும், எல்லைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விரைவில் திரும்பி வர அனுமதிக்கவும் ஒப்புக்கொண்டனர்.

சீனா மற்றும் அமெரிக்காவின் ஊக்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இது ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்பட்டது.

ஆனால் திங்களன்று, கம்போடியாவின் நடவடிக்கைகள் “போர் நிறுத்த விதிமுறைகளுக்கு முரண்பட்டதாக” மற்றும் “ஆத்திரமூட்டலும் பதட்டங்களையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகள்”
என ரோயல் தாய் இராணுவம் கூறியுள்ளது.

இதனால் ஜூலை முதல் தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்ட 18 கம்போடிய வீரர்களின் விடுதலை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்து இராணுவம், ஒப்பந்தங்கள் மற்றும் தேசிய இறையாண்மை மீறல்கள் தொடர்ந்தால், அதன்படி நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இது தொடர்பில் கம்போடியா இதுவரை பதில் அளிக்கவில்லை.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!