அர்ச்சுனா எம்.பி அணியின் அனைத்து வேட்பு மனுக்களும் நிராகரிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மதியம் முடிவடைந்ததை அடுத்து வேட்பு மனுக்களை சரி பார்க்கும் பணி மாவட்ட தேர்தல் செயலகங்களில் நடைபெற்று வருகின்றது.
அதனடிப்படையில் சில கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தாக்கல் செய்திருந்த அனைத்து வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்ட்டுள்ளன.
அத்துடன் அர்ச்சுனா எம்.பி தலமையிலான குழுவினர் தாக்கல் செய்த அனைத்து வேட்புமனுக்களும் நிராகரிக்கப்ட்டுள்ளது
குறித்த வேட்பு மனுத்தாக்கல் நிராகரிக்கப்ட்டதற்கான காரணம் தொடர்பில் உடன்பாடில்லை என்பதுடன் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறித்த கட்சியினர் அறிவித்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)