இலங்கை செய்தி

யாழ்லில் உணவின்றி தவிக்கும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் – மாவட்ட செயலகம் தகவல்

யாழ் மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில் போதிய உணவு இல்லாமல் 13 ஆயிரத்து 888 பேர் இருப்பதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் யாழ் மாவட்டத்தில் போதிய உணவில்லாமல் இருப்போர் பட்டியலில் ஊர்காவல்துறை பிரதேச செயலகம் 2, 966 பேருடன் முதலிடத்தையும் இரண்டாவது இடத்தை 2,618 பேருடன் பருத்தித்துறை பிரதேச செயலகமும் பெற்றுள்ளதுடன், மூன்றாவது இடத்தில் 2,245 சங்கானை பிரதேச செயலகம் உள்ளது.

உடுவில் பிரதேச செயலகம் – 1800 பேர்

நெடுந்தேவு பிரதேச செயலகம் – 932 பேர்

மருதங்கேணி பிரதேச செயலகம் – 750 பேர்

வேலனைப் பிரதேச செயலகம் – 682 பேர்

கோப்பாய் பிரதேச செயலகம் – 564 பேர்

கரவெட்டி பிரதேச செயலகம் – 377 பேர்

யாழ். பிரதேச செயலகம் – 124 பேர்

சாவகச்சேரி பிரதேச செயலகம் – 120 பேர்

சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் – 108 பேர்

காரைநகர் பிரதேச செயலகம் – 38 பேர் என காணப்படுகின்றனர்.

யாழ் மாவட்டத்தில் மந்தப் போசாக்கு உள்ளவர்களாக 8112 பேர் காணப்படுவதுடன் அவர்களில் ஐந்து வயதுக்கு உட்பட்டு 3796 பேரும், ஐந்து வயது தொடக்கம் 9 வயதிற்குட்பட்டு 2969 பேரும் 10 வயது தொடக்கம் 17 வயதிற்குட்பட்டு 2347 பேரும் உள்ளதாக   மாவட்ட செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 14 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை