மாணவரணி பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்புக் வழங்கப்பட்டது

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நகர மாணவரணி பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்புக் மற்றும் பென்சில் பேனா வழங்கப்பட்டது.
இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டதில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன இதில் ஒரு பகுதியாக காரைக்குடியில் திமுக நகர மாணவரணி அமைப்பாளர் அஷ்ரப் ஏற்பாட்டின் பேரில் முன்னால் அமைச்சர் தென்னவன்,
காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துதுறை பள்ளி குழந்தைகளுக்கு நோட்புக், பென்சில் ,பேனா, மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்,
இந்த நிகழ்ச்சியில் திமுக அவை தலைவர் சன் சுப்பையா, திமுக இளைஞர் அணி சார்பில் புகாரி, சுரேஷ், மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
(Visited 12 times, 1 visits today)