புலஸ்தினி மகேந்திரனின் DNA அறிக்கையை ஏற்க முடியாது – தந்தை சிரில் காமினி
கட்டுவாப்பிட்டி தேவாலய குண்டுதாரிகளின் மனைவியான சாரா ஜாஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரனின் மரணம் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் மூன்றாவது அறிக்கை அவர்களின் முன்னைய அறிக்கைகளுக்கு முரணானது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 26, 2019 அன்று சாய்ந்தமருதில் உள்ள பாதுகாப்பான வீட்டில் தற்கொலை குண்டு வெடிப்பின் போது சாரா ஜாஸ்மின் இறந்தார் என்று டிஎன்ஏ சோதனைகள் வெளிப்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் டிஎன்ஏ பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.