புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் மற்றும் 13 ஆவது திருத்தம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அரசாங்கம் விளக்கம்!
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் குறித்த நிலைப்பாடு மற்றும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபித்தல் உட்பட நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் அலி சப்ரி, 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் அமைச்சர் விளக்கினார்.
உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை அமைப்பதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்த புதுப்பிப்பை அவர் இராஜ தந்திரிகளுக்கு வழங்கினார்.
மேலும் நாட்டின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்த அனுபவப் பகிர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காக தென்னாபிரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது அது குறித்த நடைமுறைகளை எளிதாக்கியமைக்கும் அந்நாட்டு அரசாங்கத்திற்கு அமைச்சர் இதன் போது நன்றி தெரிவித்தார்.