பிரான்ஸில் தொடரும் வன்முறைகள் – 77 அதிகாரிகள் காயம் – 45 பேர் கைது
பிரான்ஸில் வியாழக்கிழமை இடம்பெற்ற 11 ஆவது நாள் ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே பலத்த மோதல் வெடித்தது.
இதில் 77 அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Glacière பகுதியில் மாலை 6 மணி அளவில் போராட்டக்காரர்கள் ஜொந்தாமினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் இரு அதிகாரிகள் காயமடைந்தனர். Boulevard du Montparnasse பகுதியிலும் வன்முறை வெடித்தது. ஆர்ப்பாட்ட முடிவில் பரிசில் 77 அதிகாரிகள் காயமடைந்ததாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
காயமடைந்த அதிகாரிகளில் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்தவார ஆர்ப்பாட்டத்தில் 105 அதிகாரிகள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)





