பிரான்ஸில் கொவிட் 19 தொற்றுக்கு எதிராக மீண்டும் தடுப்பூசி போடப்படும் பணி ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
எளிதில் தொற்றுக்கு உள்ளாகக்கூடியவர்களை கருத்தில் கொண்டு இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது.
இறுதியாக தடுப்பூசி போட்டு ஆறு மாதங்கள் நிறைவு செய்தவர்கள் அல்லது, ஆறு மாதங்களுக்கு முன்னர் தொற்றுக்குள்ளானவர்கள் இந்த புதிய தடுப்பூசியினை போட்டுக்கொள்ள ஏதுவானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் இருந்து இந்த தடுப்பூசி போடும் பணி ஆரம்பமாக உள்ளது. முதற்கட்டமாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.