பாராளுமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் சிறப்புரிமை பிரச்சினையை கொண்டுவருவோம் – நளின் பண்டார!
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் ஜனாதிபதிக்கு எதிராக சிறப்புரிமையை பிரச்சினையை கொண்டுவருவோம் என எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்றால் அதன் பெறுபேறு எவ்வாறு அமையும் என்பது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரியும். அதனால் அவர் ஒருபோதும் இந்த தேர்தலை நடத்த மாட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் இடம்பெறுவதை நிறுத்துவதற்கு அரசியலமைப்புக்கு விராதேமான எந்த நடவடிக்கைக்கு செல்வதற்கும் அவர் பின்வாங்கப்போவதில்லை.
அவரின் இந்த நடவடிக்கைக்கு பொதுஜன பெரமுன பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது எனக் கூறினார்.