ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் – சிக்கலில் மக்கள்

ஜெர்மனிய நாட்டில் தற்பொழுது மருந்து பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கின்றது.

ஜெர்மனியில் மருந்தகங்களுக்கு பொறுப்பான அமைப்பானது மருந்துகளுக்கு தற்போது பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றது.

குறிப்பாக 400 மருந்துகள் இவ்வாறு மிகவும் குறைவாக காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வைத்தியசாலைகள் பல  சிக்கலை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிய வந்திருக்கின்றது.

பல நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கான தகுந்த மருந்துகளை உரிய நேரத்தில் வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நோயாளிகளுடைய தாய் தந்தையர்கள் தங்களதுகுழந்தைகள் மிகவும் கரிசனை கொண்டு வருவதாகவும் குறிப்பாக குழந்தைகளுக்கான காய்ச்சலுக்கான மருந்து  மற்றும் சில மருந்துகள் உள் இழுப்பதற்குரிய மருந்துகள் போன்றவை பற்றாக்குறை காணப்படுவதுடன் அதேபோன்று கூடுதலாக புற்று நோய்களுக்குரிய மருந்துகளும் இவ்வாறு  பற்றாக்குறை காணப்படுவதாக தெரியவருகின்றது.

முக்கியமாக இந்த மருந்துகளை எடுத்து வருகின்ற வாகனங்களுடைய தொகையானது குறைவாக இருப்பதாகவும் அதாவது மருந்துகளை நிரப்புவதற்குரிய கட்டமைப்புக்கள் குறைவடைந்து வருவதும்  உலகளாவிய ரீதியில் தற்பொழுது மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை இதுக்கு முக்கிய காரணம் அமைந்துள்ளதாகவும் தெரிய வந்திருக்கின்றது.

ஜெர்மனியின் சமஷ்டி சுகாதார அமைச்சர் கல் லௌட் அவர்கள் இந்த நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிய வந்திருக்கின்றது.

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி