சீனா செல்ல வேண்டாம் – தைவான் மக்களுக்கு எச்சரிக்கை
சீனாவுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி தைவான் அதன் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தைவானின் சுதந்திரத்தைத் தீவிரமாக ஆதரிப்போருக்கு தண்டனை விதிக்கப்படும் என்று சீனா சென்ற வாரம் மிரட்டல் விடுத்திருந்தது.
சீனாவின் நிர்வாகத்தில் உள்ள ஹாங்காங், மக்காவ் ஆகியவற்றுக்கும் அவசியமின்றிச் செல்ல வேண்டாம் என்று தைவான் கேட்டுக்கொண்டுள்ளது.
தைவானின் தற்போதைய அதிபர் லாய் சிங்-தேயைப் (Lai Ching-te) பிரிவினைவாதி என்று சீனா சாடி வருகிறது.
கடந்த வாரம் சீனா, புதிய சட்ட வழிகாட்டிகளை அறிமுகப்படுத்தியது. அதன்படி சுதந்திரத்திற்காகப் போராடும் பிரிவினைவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சீனா கூறியது.
அதன் காரணமாகச் சீனாவிற்கும் அதிபர் லாயின் அரசாங்கத்திற்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)