சிங்கப்பூரில் பெண்ணை தந்திரமாக ஏமாற்றி வீடியோ எடுத்து கணவனுக்கு அனுப்பிய நபர்
சிங்கப்பூரில் திருமணமான நபர் ஒருவர் பெண்ணுடன் உறவை ஏற்படுத்தி ஏமாற்றியதாக செய்தி வெளியாகியுள்ளது.
அவர் முதலில் ஒரு எஸ்கார்ட் முகவராக நடித்தும், பின்னர் வாடிக்கையாளரைப் போல் காட்டிக்கொண்டும் பெண்ணை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
28 வயதான அந்தப் பெண், ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்தபோது, அந்த நபர் பாலியல் சந்திப்பின் போது எடுத்த வீடியோக்களைக் வைத்து கணவருக்கு அனுப்புவேன் என்றும் மிரட்டியும் உள்ளார்.
ஆனால் மிரட்டலோடு விடாமல், பெண்ணின் 21 வினாடி அந்தரங்க வீடியோவை அவரது கணவருக்கு அனுப்பினார்.
இந்நிலையில், கென்ரிக் லியு கென்லி என்ற 33 வயதுமிக்க அவர், இறுதியில் கைது செய்யப்பட்டு, ஏழு குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டது.
மார்ச் 6 ஆம் தேதி, நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, அவருக்கு நான்கு ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மற்ற குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துகொள்ளப்பட்டன.