கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை மாலை மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கைது, நாட்டில் விலைவாசியேற்றம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
(Visited 12 times, 1 visits today)