Site icon Tamil News

கதிரியக்க நீரைக் கடலில் கலக்க திட்டமிடும் ஜப்பானின் செயலால் கடும் கோபத்தில் மக்கள்

ஐப்பான் கதிரியக்க நீரைக் கடலில் கலக்கச் செய்யும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராகத் போராட்டம் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கத்தின் திட்டம் ஜப்பானிய மீனவச் சமூகங்களைக் கடும் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.

ஜப்பானின் நடவடிக்கையால் சீனாவும் தென்கொரியாவும் ஆத்திரமடைந்துள்ளன.

2011ஆம் ஆண்டு Fukushima அணுவுலை சேதமடைந்தது. அங்கு சேகரிக்கப்படும் மில்லியன் டன்னுக்கு மேற்பட்ட கதிரியக்க நீர் இந்த ஆண்டின் முற்பாதியில் பசிபிக் பெருங்கடலில் கலக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த நடைமுறை பல்லாண்டுகள் நீடிக்கக்கூடும்.

மாசடைந்த தண்ணீர் Fukushimaவின் Daiichi அணுவுலையில் சேகரிக்கப்படுகிறது. அது விரைவில் கொள்ளளவை எட்டிவிடும் என்று தெரிகிறது.

அபாயமான கழிவுநீர் பாதுகாப்பான தரத்துக்கு மாற்றப்படும் என்று ஜப்பானிய அரசாங்கம் கூறுகிறது. ஆனாலும் மக்களின் சந்தேகம் தொடர்கிறது.

Exit mobile version