இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவராக சனத் ஜயசூரிய நியமனம்

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட்டுக்கான (SLC) தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளார்.
இதன்படி, குறித்த குழுவின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான பர்வீஸ் மஹரூப், அசந்த டி மெல், சரித் சேனாநாயக்க மற்றும் கபில விஜேகுணவர்தன ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)