இரகசியமாக சீன நிறுவனத்துக்கு நிலத்தை விற்ற சுவிஸ் மேயர் ;வெளிவந்த இரகசியம்
சுவிட்சர்லாந்தின் Sankt Gallen மாகாணத்தில், சீன நிறுவனம் ஒன்றிற்கு 2,000 சதுர மீற்றர் நிலத்தை இரகசியமாக விற்றுவிட்டதாக, Rapperswil பகுதி மேயர் மீது அப்பகுதி அரசியல்வாதிகள் குற்றம்சாட்டியுள்ளார்கள்.
அவர் 2.4 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு அந்த நிலத்தை விற்றதாக கூறப்படுகிறது. அந்த சீன நிறுவனம், அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்காக திட்ட அனுமதி கோரியதைத் தொடர்ந்து இந்த விடயம் வெளியே வந்துள்ளது.
Social Democratic கட்சி உறுப்பினர்கள், இந்த விடயம் உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, Sankt Gallen மாகாண அதிகாரிகளிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்கள்.
(Visited 4 times, 1 visits today)