தண்ணீர் திறக்க ஏற்பாடு – விவசாயி மகிழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் இரண்டாம் போக நெல் தற்போது நடவு செய்வ ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஏரி பாசனத்தை நம்பியுள்ள நெல் நடவு செய்த விவசாயிகளுக்கு தண்ணீர் தேவைப்படுவதால் செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையின் முழு கொள்ளளவு 59 அடி உள்ள நிலையில்,
பாசன வசதிக்கு நீர் திறந்திட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இன்று நீர்வளத்துறை அதிகாரி மற்றும் செங்கம் வட்டாட்சியர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நடவு செய்த பயிர்களை காத்திட போதுமான தண்ணீர் அணையிலிருந்து திறக்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைத் தொடர்ந்து,
இதுகுறித்து முறையாக ஆலோசித்து விட்டு உடனடியாக தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தண்ணீர் திறக்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.