சீனாவில் பணக்காரர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சீனாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 5ஆம் திகதி வெளியிடப்பட்ட சுவிஸ் வங்கி அறிக்கையின்படி, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் சொத்துக்களைக் கொண்ட சீனாவில் உள்ளவர்களின் எண்ணிக்கை 520இல் இருந்து 427 ஆகக் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க குறைவு என்று அறிக்கை காட்டுகிறது.
சீனாவின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்பட்டுள்ள சவால்களும், நிதித்துறையில் ஏற்பட்டுள்ள குழப்பமும்தான் முக்கிய காரணம் என சுவிஸ் வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.
சீனாவின் பணக்காரர்கள் பட்டியலில் இருந்து 132 பேர் வெளியேறியுள்ளனர், மேலும் 42 புதிய கோடீஸ்வரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், அறிக்கையின் தரவை மேற்கோள் காட்டி, ஒட்டுமொத்தமாக, சீனாவின் பில்லியனர்களின் செல்வம் 20 சதவீதம் சரிந்து சுமார் 1.4 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.