ஈரான்-இஸ்ரேல் இடையேயான பதற்றம் தணிந்தது – சர்வதேச ஆய்வாளர்கள் தகவல்
ஈரான்-இஸ்ரேல் இடையேயான பதற்றம் தற்போது தணியும் அறிகுறிகள் தென்படுவதாக வெளிநாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது இஸ்ரேலில் பெருமளவிலான இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதுடன் இரு நாடுகளுக்கும் இடையில் போர் மோதல்கள் உருவாகினால் இலங்கை போன்ற நாடுகளும் கடுமையாக பாதிக்கப்படலாம்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் சர்வதேச ஆய்வாளரான ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்கவிடம் கேட்டோம்.
அங்கு அவர் கூறுகையில், தற்போது இரு நாடுகளும் சூடுபிடிக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலில் தற்போது சுமார் 7500 இலங்கையர்கள் பணியாற்றி வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் கணக்கில் ஒரு குறிப்பை பதிவிட்டுள்ள தூதுவர், இஸ்ரேலின் நிலைமை கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.