மலேசியாவில் ஓடிக்கொண்டிருந்த சலவை இயந்திரத்தில் சிக்கிய சிறுவனின் நிலை
மலேசியாவின் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன், சலவை இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் சுயநினைவின்றிக் காணப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.
இயந்திரம் ஓடிக்கொண்டிருந்தபோது அந்த 6 வயதுச் சிறுவன் அதனுள் புகுந்ததாக நம்பப்படுகிறது.
அந்தச் சிறுவனுக்குத் தொடர்புத் திறன் குறைபாடு உள்ளதாக பொலிஸார் அதிகாரி கூறினார்.
காலை 9:30 மணியளில் வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது சிறுவன் சலவை இயந்திரத்திற்குள் ஏறியதாக Bernama செய்தித்தளம் தெரிவித்தது.
சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டபோது, சலவை இயந்திரம் செயல்படவில்லை. சிறுவனை அவனின் பாட்டி கண்டுபிடித்ததாக Bernama தெரிவித்தது. அப்போது அவனுக்குச் சுயநினைவு இல்லை.
தலையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக சிறுவன் உயிரிழந்தார் என்று பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
(Visited 11 times, 1 visits today)





