மதுரோவின் வீழ்ச்சியை முன்பே கணித்த பெருவின் ஆன்மீக குழு
வெனிசுலாவில்(Venezuela) அமெரிக்கா(America) ஒரு எதிர்பாராத 30 நிமிட இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ(Nicolas Maduro) கைது செய்தது.
இந்த நடவடிக்கை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தாலும் சில நாட்களுக்கு முன்பே பெருவில்(Peru) இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருவின் தலைநகரான லிமாவில்(Lima) உள்ள கராகஸிலிருந்து(Caracas) 4,000 கி.மீ. தொலைவில் ஷாமன்கள்(shamans) என்ற ஆன்மீக குழு ஒன்று டிசம்பர் 29 அன்று, லிமாவில் கடலோரத்தில் வரவிருக்கும் ஆண்டைப் பற்றிய ஒரு வருடாந்திர சடங்கைச் செய்தனர்.
இதில், 63 வயதான வெனிசுலா தலைவர் மதுரோ பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் டொனால்ட் டிரம்ப்(Donald Trump) அவரது வெளியேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் ஷாமன்கள் குழு தெரிவித்துள்ளது.
“அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மதுரோவை பதவி நீக்கம் செய்வதற்கு முன்பு நீங்களே ஓய்வு பெறுமாறும் வலியுறுத்துகிறோம், அடுத்த ஆண்டு இது நடக்கும் என்று நாங்கள் கற்பனை செய்துள்ளோம்” என சடங்கின் போது ஷாமன் அனா மரியா சிமியோன்(Ana Maria Simeon) குறிப்பிட்டுள்ளார்.





