சாலை பாதுகாப்பு திட்டங்கள் : பிரித்தானியர்களுக்கு அவசியமாகும் பரிசோதனை!
பிரித்தானியாவில் இந்த ஆண்டில் நடைமுறைக்கு வரும் புதிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்கள்களுக்கு கட்டாய கண் பரிசோதனைகள் அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்கள் நாளைய தினம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் வயதானவர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தாமல் வீதி விபத்துக்களை தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2035 ஆம் ஆண்டுக்குள் வீதி விபத்துக்களால் ஏற்படும் இறப்புகளை 65 சதவீதமாக குறைக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் இந்த புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளது.
2024 ஆம் ஆண்டு வீதி விபத்துகளினால் ஏற்பட்ட இறப்புகளுக்கு பெரும்பாலும் வயதானவர்களே காரணமாக உள்ளதாகவும், 12 சதவீதமான முதியவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உள்ளூர் போக்குவரத்து அமைச்சர் லிலியன் கிரீன்வுட் (Lilian Greenwood), வயதானவர்களின் நல்வாழ்வு மற்றும் சுதந்திரத்திற்கு வாகனம் ஓட்டுவது முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் நமது சாலைகளில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.





