வெள்ளை மாளிகையின் ஜன்னலிலிருந்து வீசப்பட்ட மர்ம பை – குழப்பத்தில் டிரம்ப்

வெள்ளை மாளிகையின் ஜன்னலிலிருந்து கறுப்புப் பை வெளியே வீசப்படும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
எனினும் இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் கூட்டத்தின்போது அந்தக் காணொளி குறித்து ஒருவர் டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பினார்.
அந்தக் காணொளியைத் தம்மிடம் காட்டுமாறு கூறிய டிரம்ப், அதைப் பார்த்துவிட்டு செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கப்படும் காணொளி உண்மையானது போன்றே இருப்பதாக கூறினார்.
அது சற்று அச்சுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் அது உண்மையான காணொளி தான் என்று முன்பே வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்திவிட்டார்.
மேம்பாட்டுப் பணிகளின்போது குத்தகைக்காரர் ஜன்னல் வழி குப்பைகளை வீசியதாக அவர் விளக்கினார்.
வெள்ளை மாளிகையின் 2ஆவது மாடியில் ஜனாதிபதி இருக்கும் பகுதியில் அந்தப் பணிகள் நடந்தன.