பொழுதுபோக்கு

விட்டதை பிடிக்க ஷங்கர், கமல் திட்டம்.. இந்தியன் 3 விரைவில் ஆரம்பம்

உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்த நிலையில், இந்தியன் 3 படத்திற்கான படப்பிடிப்பை படக்குழு தொடங்கி உள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமின்றி கமல்ஹாசன், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரின் திரைப் பயணத்திலும் மிக முக்கியமான படம் இந்தியன். 1996ம் ஆண்டு வெளியான இந்த படத்தில்,கமல்ஹாசன், சுகன்யா,மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் தொழில்நுட்பம், திரைக்கதை, மேக்கிங் என பல உச்சங்களை தொட்டிருந்தார் ஷங்கர். காலப்போக்கில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு கிளாசிக் அந்தஸ்த்தை இப்படம் பெற்றது.

இந்தியன் படத்தில் முதல் பாகத்தில் ஊழல் செய்த அதிகாரிகளை பழிவாங்கும் சேனாதியாக நடித்திருந்தார் கமல். அதே போல இந்தியன் 2வில் உலக அளவில் ஊழல் செய்பவர்களை பழிதீர்ப்பதும், ஒவ்வொரு அரசு அதிகாரி வீட்டிலும் லஞ்சம் வாங்கும் ஊழியர்களை அவரது வீட்டில் இருப்பவர்களே காட்டிக்கொடுப்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களால் இந்தியன் 2 படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, இந்தியன் 3 படத்தில் உள்ள குறைகளை சரி செய்து அதற்கான காட்சிகளை மீண்டும் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக ஷங்கர் மற்றும் கமல் இருவரும் கலந்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக ஆகும் செலவை தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்காமல் அந்த செலவை தானே ஏற்கிறேன் என்று கமல் கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியன் 2வில் விட்டதை இந்தியன் 3ல் பிடிக்க இருவரும் சேர்ந்து பக்காவாக பிளான் போட்டு உள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content