சேற்றிலே புதைக்கப்பட்ட இளம்பெண் – இராணுவச் சிப்பாய் கைது
கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் வயலில் 25 வயதுடைய திருமணமான பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் அலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு, அந்த பகுதியில் நடந்த இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு கணவர் வீடு திரும்பியபோது, மனைவி வீட்டில் இல்லாததால், அக்கம் பக்கத்தினர், மனைவியை தேடினர். அப்போது, நேற்று காலை, வீட்டின் பக்கத்து வயல்வெளி சேற்றில், குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. […]













