தொலைபேசியை பறித்த அதிபர்… அவமானத்தில் மாணவன் எடுத்த விபரீத முடிவு!
பாடசாலை மாணவனின் தொலைபேசியினை அதிபர் பறித்தமையினால் மாணவன் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியா பூவரசங்குளத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டிக்கான இல்ல அலங்கார செயற்பாட்டினை குறித்த மாணவன் சக மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்டதாகவும், அதற்கான ஒவியம் வரைவதற்காக அன்றையதினம் இரவு பாடசாலைக்கு தொலைபேசியினை கொண்டு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். இவ்வாறு தொலைபேசியினை பாடசாலையினுள் குறித்த மாணவன் […]













