அமெரிக்கா கடும் புயல் மற்றும் கனமழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பெரும்பாலான இடங்களில் வீசிய கடும் புயல் மற்றும் கனமழையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சூறாவளிக் காற்று வீசியதில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால், பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட எட்டு கவுன்ட்டி பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
(Visited 19 times, 1 visits today)