இலங்கை

மட்டக்களப்பில் கடும் மழை: வெள்ளத்தில் மூழ்கிய தாழ்நிலங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் நவகிரி குளத்தின் வான்கதவுள் திறக்கப்பட்டுள்ளன.

கடும் மழைபெய்துவருவதன் காரணமாக மட்டக்களப்பு நகரின் பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன
.
இருதயபுரம்,ஜெயந்திபுரம்,கூழாவடி,மாமாங்கம்,உப்போடை,ஊறணி உட்பட பல பகுதிகளில் உள்ள தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களில் ஒன்றான நவகிரிகுளத்தின் நீர்மட்டம் வான்பாயும் நிலைமை காரணமாக இரண்டு வான்கதவுகள் ஐந்து அடி திறக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாவியினை அண்டியுள்ள மற்றும் நவகிரி ஆற்றுப்படுக்கையினை அண்டியுள்ள பகுதி மக்களை அவதானமாகயிருக்குமாறு போரதீவுப்பற்று பிரதேச செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம் நேற்றைய தினம் மினிசூறாவளி காரணமாக சேதமடைந்த வீடுகளை போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் சேத நிலைமைகள் தொடர்பிலும் மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளனர்.

(Visited 10 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்