இலங்கையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்குக் குறுகிய காலப்பகுதியே காணப்படுகின்றது.
அதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)