செய்தி விளையாட்டு

ரோஹித் சர்மாவுக்கு முடிவுரை எழுதும் கம்பீர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் மிக முக்கிய மாற்றங்களை கொண்டு வருவதற்கு பிசிசிஐ நிர்வாகம் தயாராகி வருவதாக பார்க்கப்படுகிறது.

கேப்டன் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜிம்பாப்வே டி20 தொடருக்கு பின் இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

துலீப் டிராபி, இராணி கோப்பை, ரஞ்சி டிராபி மற்றும் இந்தியா ஏ அணிகளின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

ஒயிட் பால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வந்த அவர், திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியது குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் வங்கதேச டி20 தொடர், தென்னாப்பிரிக்கா டி20 தொடர் உள்ளிட்ட இந்திய அணிகளிலும் ருதுராஜ் கெய்க்வாட் சேர்த்து கொள்ளப்படவில்லை.

டி20 கிரிக்கெட் பக்கமே ருதுராஜ் கெய்க்வாட்-ஐ கொண்டு செல்லாமல், முழுக்க முழுக்க ரெட் பால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதற்கு என்ன காரணம் என்று புரியாமல் சிஎஸ்கே ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டிக்கு பின் இந்திய அணியில் மாற்றம் கொண்டு வரப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்திய அணி அடுத்த 8 மாதங்களில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.

இதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்வானால், அந்தப் போட்டியிலும் விளையாடும்.

இதில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகவுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 38 வயதை எட்டும் சூழலில், இந்திய அணியின் மாற்று தொடக்க வீரரை தயார் செய்ய கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் தயாராகியுள்ளனர்.

இதன் காரணமாகவே அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் இந்திய அணி தோல்வியடைந்தால், நிச்சயம் பல்வேறு வீரர்கள் நீக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

விராட் கோலியை தவிர்த்து ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், அஸ்வின், ஜடேஜா உள்ளிட்டோர் டெஸ்ட் அணியில் இருந்து ஒதுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

ஏனென்றால் அடுத்தக் கட்ட வீரர்களை இந்திய அணிக்கு கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது.

அதற்கு உள்ளூர் டெஸ்ட் தொடர்களே சரியான களமாக இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.

இதனால் விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி