உலகம் செய்தி

வெனிசுலாவில் பிப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணையம்

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலோன் மாஸ்க் அறிவித்துள்ளார்.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் அதிரடியாகக் கைது செய்து நியூயோர்க்கிற்கு கொண்டு சென்றுள்ள நிலையில், அங்கு நிலவும் தகவல் தொடர்புக் குறைபாடுகளை நீக்க ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) மூலம் பிப்ரவரி 3-ஆம் திகதி வரை இலவச இணையம் வழங்கப்படும் என எலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மதுரோவின் வெற்றிடத்தை நிரப்ப அந்நாட்டு உச்சநீதிமன்றம் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை (Delcy Rodriguez) தற்காலிக ஜனாதிபதியாக நியமித்துள்ளது.

நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ள நிலையில், வெனிசுலாவின் நிர்வாகத்தை சீரமைக்கும் வரை அமெரிக்கா அந்நாட்டை வழிநடத்தும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

பத்தாண்டுகால மதுரோவின் ஆட்சி அமெரிக்காவின் நேரடி இராணுவ நடவடிக்கையின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!