மோடியின் சொந்த மாநிலத்தில் குடிநீர் பிரச்சினை – பலர் ஆபத்தான நிலையில்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான காந்திநகரில், குடிநீர் பிரச்சினையால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 133 பேருக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
குஜராத்தின் மேற்குப் பகுதியில் உள்ள காந்திநகரில் குடிநீர் மாசுப்பாடு காரணமாக பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 45 பேர் தற்போது மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடிநீர் குழாய் வலையமைப்பில் குறைந்தது 21 கசிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, இது கழிவுநீர் மூலம் மாசுபடுவதற்கு வழிவகுத்தது என்று உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உள்ளூர்வாசிகள் நீண்ட காலமாக மாசுபட்ட தண்ணீரைப் பெறுவதாகக் கூறிய போதிலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேற்படி மாசுபட்ட குழாய்கள் 2.57 பில்லியன் (£21 மில்லியன்) பொருட் செலவில் கட்டப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





