யாகி புயல் காரணமாக மியான்மரில் 250,000 பேர் இடம்பெயர்வு
மியான்மரில் யாகி சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் 235,000 க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.
“சூறாவளி வெள்ளத்தால் இடம்பெயர்ந்த 59,413 குடும்பங்களைச் சேர்ந்த 236,649 பேர் மற்றும் நாடு முழுவதும் 33 இறப்புகள்” என்று இராணுவ ஆட்சிக்குழு செய்தித் தொடர்பாளர் ஜாவ் மின் துன் ஒரு ஆடியோ அறிக்கையில் தெரிவித்தார்.
அதிகாரிகள் “சில பகுதிகளுடனான தொடர்பை இழந்துள்ளனர்” என்றும் ஆற்றங்கரைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் வேறு இடங்களில் தங்குமிடம் தேடுமாறும், விழிப்புடன் இருக்கவும் வலியுறுத்தினார்.
நிலச்சரிவைத் தொடர்ந்து மத்திய மாண்டலே பிராந்தியத்தில் தங்கச் சுரங்கப் பகுதிகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர் என்ற செய்திகளை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்று இராணுவ ஆட்சிக்குழு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.