ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு நெருக்கடி – 3000 பொருட்களின் விலை குறைப்பு

வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் அவதியுறும் ஆஸ்திரேலியர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அடுத்த மூன்று மாதங்களுக்கு 3000க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க IGA பல்பொருள் அங்காடித் தொடர் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜூன் காலாண்டில் பணவீக்க விகிதம் 3.6ல் இருந்து 3.8 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது சிறப்பம்சமாகும்.

விற்பனையில் உள்ள பொருட்களில் சமையல் பொருட்கள், துப்புரவு பொருட்கள் முதல் செல்லப்பிராணிகளுக்கான உணவு மற்றும் பலவும் அடங்கும். நவம்பர் 5ம் திகதி வரை இந்த தள்ளுபடியின் கீழ் குறைந்த விலையில் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

சில உணவுப் பொருட்களின் விலைகள் சாதாரண அளவை விட பாதியளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Coles மற்றும் Woolworths பல்பொருள் அங்காடிகளின் விலைகள் குறித்து செனட் சபை விசாரணையின் பின்னர் அந்த நிறுவனங்களுக்கு புதிய நடத்தை விதிகளை அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், உரிமையாளர் நிறுவனம் இந்த விலையை குறைத்துள்ளமை விசேட அம்சமாகும்.

Woolworths, Coles, ALDI மற்றும் Metcash உட்பட 5 பில்லியன் டொலர் வருடாந்திர வருவாய் வரம்பை அடையும் அனைத்து சூப்பர் மார்க்கெட்களுக்கும் செனட்டின் பரிந்துரைகள் பொருந்தும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், 39 சதவீத நுகர்வோர் தங்கள் தேவைகளுக்கு சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க சூப்பர் மார்க்கெட்டுகளை நம்பவில்லை என்று கூறியுள்ளனர்.

(Visited 38 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!